
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.
English Meaning:
Sakalas Have All Three MalasThey who in Malas three enveloped
In worldly life wallow,
Are the Sakalas per se;
Thus are the Devas, the humans,
And the rest of Brahma`s creation numerous
Like the very worm
That life`s womb enters;
—All these are Sakalas that crowd the world.
Tamil Meaning:
`மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.Special Remark:
`ஆகவே, இவர்கள் அனைவரும் மூன்றவத்தை -களையும் அடைவர்` என்பது குறிப்பெச்சம். மேல், விஞ்ஞான கலர் பிரளயாகலர்கட்கும் சிலவகையான சகலாவத்தைகள் உள என்பதுபோலக் கூறியமையால், `மும்மலத்தவரே உண்மையில் சகலாவத்தையை அடைவர்` என்றற்கு, `அம்மெய்ச்சகலத்தர்` என்றார். ஆர்த்தல் - ஆரவாரித்தல். இஃது உலக மயக்கத்தில் மயங்கிச் செருக்குதல். மேல், ``சகல அவத்தையில் சார்ந்தோர்`` - என்னும் மந்திரத்திலும் (2198) இம்மந்திரப் பொருள் கூறப்பட்டதாயினும் அங்கு, `சகல வருக்கத்தினராவார் இவர், என்பதை உணர்த்துதலும், இங்கு, `உண்மைச் சகலாவத்தையை எய்துபவர்கள் இவர்` என்பதை உணர்த்துதலும் ஆகக்கருத்துக்கள் வேறுவேறு என்க. பின்னர்க் குறிக்கப்பட்ட கருத்தே இம்மந்திரத்தாற் கொள்ளப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage