
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள்
இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.
English Meaning:
Who Are the Sakalas?Sakalas are those
Who in Sakala State are;
Steeped they are in Pasas three;
The peerless Brahma, Hari,
The Celestials numerous,
The humans here below
And all lives like the tiny worm,
All, all, are Sakalas verily.
Tamil Meaning:
ஆன்மதத்துவங்கள் கூடுதல் குறைதல்களால் நிகழும் அவத்தைகளே சகலாவத்தைகள் ஆதலின், அவைகளை அடைந்தோர் யாவரும் சகல வருக்கத்தினரே. ஏனெனில், அவர்களே முக்குண வடிவாகிய பிரகிருதியுட்பட்டு, மும்மலங்களை உடையவர் -களாய் இருத்தலின். எழுவகைப் பிறவியும் எய்தும் உயிர்கள் யாவும் சகல வருக்கத்தினவாதல் தெளிவு. இனி அவ் உயிர்களின் மேம்பட்டவர்களாக எண்ணப்படுகின்ற `அயன் மால்` என்பவர்களும் பிரகிருதி புவனத்துள் பிறந்து இறந்தமை புராண இதிகாசங்களில் கேட்கப்படுதலால், அவர்களும் சகல வருக்கத்தினரே.Special Remark:
`நீல உருத்திரர்` என்பவர் ஆகமங்களில் அருகிச் சுட்டப்படுதலால், அவர் சகல வருக்கத்தினராதலை நாயனர் இங்குக் குறிக்கவில்லை. `சகலரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. சகல வருக்கத்தினரே சிவனை அறியாது மயங்குபவர். அது ``தோன்றலர்தொத் துள்ளார் துணை``3 என்னும் திருவருட்பயனாலும் விளங்கும். அயன், மால் என்பவரும் ஒரோவழி அங்ஙனம் மயங்குபவராதலை நினைக்க. இரண்டாம் அடியின் இறுதியில், `அவரேயாதலின்` என்னும் காரணச் சொல்தொக்கு நின்றது.மாலோனைப் பிறவாதவனாகக் கூறின், நிலவுலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தமக்கள் சிலரைப் புராண இதிகாசங்கள் `மாயோன் அவதாரம்` எனக் கூறுதலை `உண்மை` என்னாது, உயர்த் -தற்பொருட்டுக் கூறிய உபசாரமொழிகளாகக் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கொள்ளின், மாயோன் சம்பு பக்கத்தவனே யாவன்.
நரர் - மக்கள். கீடம் - புழு. `நரராதி கீடம் அந்தமாம்` என்க. உம்மை, `அனைத்தும்` எனப் பொருள் தரும் முற்றும்மை.
இதனால், `காரண அவத்தைகளை மூன்றாக எண்ணுதல் சகலரை நோக்கியே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage