
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.
English Meaning:
Gradations of Suddha States — Suddha-Kevala, Suddha-Sakala;Suddha-Jagrat, and Suddha-Suddha
In Suddha-Kevala-Mukti State
The Jiva stands alone;
When afterward
The Kalas leave,
Then is Suddha-Sakala-Mukti;
When in sound Aum
The Soul as one stands,
Then is Suddha (Kevala) Jagrat Mukti;
Still beyond,
The Soul Itself within Itself stands
Then in Suddha-within-Suddha-Mukti State.
Tamil Meaning:
உயிர் சிவத்தோடு மட்டுமே பொருந்தி நிற்கின்ற அந்தத் தனிநிலையே பரமுத்தி நிலையாகும். அதுவே உண்மையில் தூய்மை யாகும். (இதனைச் `சிவகேவலம்` என்றும். `பர கேவலம்` என்றும் கூறலாம்.) இதற்குக் கீழ்ப்பட்டன எல்லாம் சகலங்களே. (அஃதாவது, மாசொடுபட்டனவே.) அந்நிலையில், சகல வருக்கத்து ஆன்மாக்கள் கலை முதல் மண் ஈறாய் உள்ள தத்துவங்களின் நீங்கி நிற்றல். அவற்றிற்கு மெய்ந்நூல்களில்சொல்லப்படுகின்ற சுத்த கேவல மாகும். (இஃது, `அருட் கேவலம்` என்பதாகத் துகளறு போதத்தில் சொல்லப்பட்டது. வெண்பா-25) புருவ நடுவிலே நிகழ்வதாகிய சாக்கிராவத்தையிலே புறப்பொருளில் தோய்தல் இன்றி, அறிவுக் கறிவாய் உள்ள சிவத்திலே தோய்ந்திருத்தல் சகலத்தில் சுத்தமாம். (இதுவே, `சாக்கிரத்தில் அதீதம்` - என்க.)Special Remark:
முதற் பொருளை, `தத்` எனக் குறிப்பிடுதல் உபநிடத வழக்கு. `தான்` என்றது, முன்னர்க் கூறிய தற்கேவலத்தை. `சகலம்` என்பது `கலப்பு` என்னும் பொருட்டாய் நின்றது. இரண்டாம் அடியின் ஈற்றில் உள்ள `ஆம்` என்பதை மூன்றாம் அடியில் உள்ள `கேவலம்` என்பதன் பின்னர்க் கூட்டுக. `சாக்கிரத்தில்` என ஏழாவது விரிக்க. ஈற்றடியிலும் `சிவம்` தத்` என்றே சொல்லப்பட்டது. இரண்டிடத்திலும் `தன்` என்றே பிரித்து, `சிவத்தை இவ்வாறு கூறுதல் தமிழ் வழக்கு` என் -றலுமாம். `தற் சுத்தம்` என்பதில் `தன்` என்றது, மேற்கூறிய சகலத்தை.இதனால், `கேவலம்` என்னும் காரண அவத்தை பல வகையில் நிகழ்தலும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன. மேல், `ஓரிருள் மூவகை` என்னும் மந்திரத்தில்8 கேவலம் மூன்றும், நான்குமாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage