
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ
டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப்
பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின்
ஈறார் பரசிவம் ஆதேய மாமே.
English Meaning:
Turiyatita is the State UltimateWith Tattvas six times six
And Avastas of ten states
He, Jiva, enters the final state
Of Turiyatita,
Then will the Divine Gift be (Mukti);
And Jiva merges into the Light Resplendent;
Which the Five Gods reach;
There the Siva of Holy Ashes,
Jiva`s Refuge Final art.
Tamil Meaning:
முப்பத்தாறாகச் சொல்லப்படுகின்ற கருவிகளே அவத்தை வேறுபாடுகட்குக் காரணம். அந்தக் காரணத்தின்வழிக் காரியமாய் நிகழும் அவத்தைகள் இருபத்தைந்து. (கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் சுத்தம், நின்மலம் ஆகிய ஐந்தில் ஒவ்வொன்றிலும் சாக்கிரம் முதலிய ஐந்து.) அந்த இருபத்தைந்தில் முடிவாய் உள்ளது சுத்த துரியாதீதம். அதனை உயிர் அடைந்த பொழுது, ஐந்தொழில் தலைவர்களாகிய ஐவரும் அதனைத் தடை செய்யாது இருக்க, அவ்விடத்து மிக்கு விளங்கும் அருள் ஞான ஒளியினால், அனைத்துயிர்கட்கும் முடிவான புகலிடமாய் உள்ள பரசிவனது பேரின்பம் அதன் அறிவினுள்ளே பொங்கித் ததும்பும்.Special Remark:
முப்பத்தாறினையும் தொகுத்து `ஆறு` என ஒன்றாகக் கூறினமையின் `அதின்` என ஒருமையாற் கூறினார். ஆறு - வழி. `ஓட` என்னும் செயவெனெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ஓடுதல், தொடர்ச்சியாக நிகழ்தல். `போம்` என்னும் பெயரெச்சம், `போய தனால் உண்டாகும்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. ஈறார் பரசிவம் - முடிநிலையில் பொருந்தி நிற்கும் பரசிவம். ஆதேயம் - இடத்து நிகழ்பொருள். ``ஆதேயம் ஆம்`` என்றதனால, ``பரசிவம்` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் இன்பத்தைக் குறித்தது. எந்நிலையிலும் சிவம் உயிருக்கு ஆதாரமேயன்றி, ஆதேயம் ஆகாது. எனினும் அதனால் தரப்படும் இன்பம் உயிரினது அறிவினுள்ளே ஊற் றெழவே உயிர் அதனை நுகர்வதாகும். அதுபற்றி அஃது `ஆதேயம்` எனப்பட்டது. ``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது``l என முன்னருங் கூறினார். ``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம்போல் - பற்ற வாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``1(*) எனவும் ``ஊற்றிருந்துள்ளம் களிப்போன் போற்றி``(*)2 எனவும் ஆளுடை அடிகள் அருளிச் செய்தார். இவை யெல்லாம் பற்றியே,``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்``(*)3
என்றார் உமாபதிதேவர். ``ஐயைந்தாவன, சாக்கிரம் முதலிய ஐந்திலும் தனித்தனி நிழும் சாக்கிரம் முதலியன`` என்பார்க்குக் காரண அவத்தைகள் யாதேனும் ஒன்றேபெறப்படுதல் அன்றி, அனைத்தும் பெறப்படாமை அறிக.
இதனால், மேல் பெயரளவாகக் சுட்டப்பட்ட சுத்தாவத்தை -யின் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage