
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல்
சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.
English Meaning:
Suddha State Subdivisions for JivaSuddha-Kevala is State of Upasantha
Suddha-Sakala is Turiya expansive state;
Suddha-Suddha is State of Siva-Becoming;
These three belong to Suddha State.
Tamil Meaning:
பரமசிவனோடு இரண்டறக் கலந்த நிலையே சுத்தத்தில் சுத்தம். சீவன் முத்தி நிலையில் பிராரத்தத்தால் விளையும் இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பற்றிருக்கும் நிலையே சுத்தத்தில் கேவலம். சீவன் முத்தி நிலையில் உலகர்பால் இரக்கம் மிக்கு அவர்கட்கு உய்தியை வலிந்து சென்றும் உணர்வித்தலும், அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி இவைகளை அடைந்து அவ்வந் நிலையில் விளையும் சுத்த போகங்களை நுகர்தலும் சுத்தத்தில் சகலம்.Special Remark:
உபசாந்தம் - அமைதி; நடுவு நிலைமை. விலாசம் - விளையாட்டு; தமக்கு உவப்பான செயல்களில் ஈடுபடுதல். இங்கும், `சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே` என்றது, `சீவன் முத்தி ஒன்றிலேதானே இம்மூன்றும் சொல்லுதற்கும் உரியன என்பது உணர்த்துதற்கு.இதனால், `சுத்தத்தில் மூன்று` எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage