
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று
மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி
வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.
English Meaning:
Condition of Sakala StateThey get body-form
And experience enjoyments diverse;
They are by elements pervaded
And conjoined to Mind and rest of cognitive organs;
They get attached to Karmas
They abide in Tanmatras
Thus are they born
—These Jivas in Sakala State.
Tamil Meaning:
`கருவில் அதீதம்`l என்னும் மந்திரத்திற் கூறியபடி கருவிலேயே பல அவத்தைகளை அடைந்த உயிர், பின்பு பலருங்காணப் பிறந்து, சகலாவத்தையில் பூதம் முதலிய புறக் கருவிகளாலும், மனம் முதலிய அகக் கருவிகளாலும் செய்தற் குரிய செயல்களை மேற்கொண்டு, பல போக்கியப் பொருள்களில் பொருந்தி, ஓசை முதலிய புலன்களில் மூழ்கிப் பலவகை அனுபவங்களை அனுபவிப்பதாய்க் காணப்படும்.Special Remark:
`கருவுற்றிடும் சீவன் உரு உற்றுச்சகலத்தே பூத மனாதியால் மன்னிவரும் செயல் பற்றிப் போகத்து உற்றும், சத்தாதி மன்னிப்போகம் மருவுற்றும் காணும்` எனக் கூட்டி முடிக்க. ஞானேந் திரியங்களின் புலன்களையே கூறியவாராயினும், இனம் பற்றிக் கன்மேந்திரியங்களின் புலன்களாகிய மொழிதல் முதலியனவும் கொள்ளப்படும். சூக்கும தூல பூதங்களே ஞானேந்திரிய கன்மேந் திரியங்கட்கு நிலைக்களன் ஆதல் பற்றி அவற்றை, ``பூதம்`` எனப் பொதுப்படக் கூறினார். பூத மனாதி, `பூதங்களும் மனாதிகளும்` என உம்மைத் தொகை.இதனால், சகல வருக்கத்து உயிர்கள் சகல நிலையில் நிற்குமாறு இனிது விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage