
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணுங் கனவுமா யேயம் திரோதாயி
காணும் நனவில் மலக்கலப் பாகுமே.
English Meaning:
Experiences in the Five States of ConsciousnessIn Jiva`s Atita State
Anava is;
In Turiya State
Maya permeates;
In Sushupti State,
Are desires for Maya experiences planted;
In Dream State
Functions1 the Subtle Body2 with Tattvas eight;
In the Waking State
Activated is the Body Gross.
Tamil Meaning:
துரியாதீத நிலையில் உயிருக்கு ஆணவ மலம் மட்டுமே இருக்கும். அதற்குமேலே உள்ள தான துரிய நிலையில் அதனோடு வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் முதலிலே உள்ள மாயா தத்துவம் வந்து பற்றும். அடுத்து நிகழும் சுழுத்திய வத்தையில் நல்லனவும் தீயனவும் ஆகரிய காரிய கன்மங்கள் வந்து பற்றும். (இதனால், கால தத்துவமும், நியதி தத்துவமும் பற்றுதல் பெறப்படும்) அடுத்து நிகழும் சொப்பனத்தில் மேற்கூறிய கன்மங் களுக்கு ஏற்பமாயா காரியங்களான கலை முதல் நிலம் ஈறான ஏனை எல்லாத் தத்துவங்களும் வந்து பற்றும். (ஆகவே, சுத்த தத்துவங்கள் வந்து பற்றுதலும் தானே அமைந்தது.) இறுதியாக நிகழும் சாக்கிரத்தில், முன்பு நான்கு மலங்களும் பற்றிக்கொண்டதனால் அவை அனைத் -தையும் செலுத்துகின்ற திரோதான மலம் வந்து பற்றும். (என்றது, `அனைத்தையும் முழுமையாக நடத்தும்` என்றபடி.) ஐந்தவத்தை -களிலும் ஐந்து மலங்கள் இம்முறையில் உயிரை வந்து பற்றுவனவாம்.Special Remark:
`அதீதம் ஆணவம் ஆகும்; மேல் பூணும் துரியம் மாயை ஆம்; சுழுத்தி பொய்க் காவியம் ஆம்; பேணுங்களவு மாயேயம் ஆம்; நனவில் திரோதாயி காணும்; மலக் கலப்பு இவ்வாறு ஆகும்` என இம்மந்திரத்தின் சொல்முறைமை கொள்க.காரணம் நிலையுடைமையால் அது, `மெய்` என்றும், காரியம் நிலையால் அது, `பொய்` என்றும் சொல்லப்படும். கான்மியம், `காமியம்` என மருவி வழங்கும். `மாயேயம்` எனவரும் இடங்களில் எல்லாம் `மாமாயை` எனப் பாடம் திரிக்கப்பட்டது என்பதை மேலேயும் கூறுவோம்.
இதனால், அவத்தைகளில் பாசங்கள் பற்றுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage