
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

கேவல மாதியில் பேதம் கிளக் குறின்
கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள்
ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா
ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.
English Meaning:
Nine Subtle Divisions For the Soul in the Three StatesKevala, Sakala and Suddha
To speak of the subtle divisions
In the three States —Kevala, Sakala and Suddha
It is like this:
Kevala-Kevala, Kevala-Sakala, and Kevala-Suddha,
Sakala-Kevala, Sakala-Sakala, and Sakala-Suddha,
Suddha-Kevala, Suddha-Sakala, and Suddha-Suddha
—Thus are the combinations nine in all
For those in depth see.
Tamil Meaning:
காரண அவத்தைகள் `கேவலம்` முதல் மூன்றாகச் சொல்லப்பட்டாலும் அவற்றுள் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து `கேவலத்திற் கேவலம், கேவலத்திற் சகலம், கேவலத்திற் சுத்தம்` என்று மூன்றும், `சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தம்` என மூன்றும், `சுத்தத்திற் கேவலம், சுத்தத்திற் சகலம், சுத்தத்திற் சுத்தம்` என மூன்றும் ஆக ஒன்பதாம். இவ்வேறுபாடுகள் நுண்ணுணர்வுடையார்க்கே விளங்கும்.Special Remark:
இதனால், காரண அவத்கைள் மூன்றிலும் உள்ள வேற்றுமை வகைகள் தொகுத்துணர்த்தப்பட்டன.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage