
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
பதிகங்கள்

ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.
English Meaning:
Who Are the VijnanakalasVijnanakalas are souls, other numerous,
They reside in the State of Kevala;
They are possessed of Anava (mala)—alone;
The eight Vidyesvaras beginning with Ananta
The (Maha) Mantraresvaras that seven crore number;
—(These the Vijnanakalas are.
Tamil Meaning:
எல்லார்க்கும் உரித்தாகின்ற கேவலாவத்தையைத் தாங்களும் உடையவர்களாய், ஆயினும் கன்மமும், மாயையும் இன்றி, ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்களில் பக்குவம் பெற்றோர் அனந்தர் முதலிய அட்ட வித்தியேசுரர்களும், சத்த கோடி மகாமந்திரேசுரர்களும் ஆவர். அபக்குவரோஅநேகர்.Special Remark:
அபக்குவர்களையும் `மந்திரேசுர்` என்பர். இவர்களைச் சிவஞான சித்தி.8 ``வித்தைகள்`` எனக்கூறிற்று. `மந்திர மகேசுரர்` என்பதனை, ``ஈசர்`` எனக் கூறினார். `அநேகர்` என்ற குறிப்பானே, அபக்குவர் என்பது போந்தது. ஒரு மலம் உடையோர் `விஞ்ஞான கலர்` எனப்படுவர்.இதனால், `சகலாவத்தை யில்லாதவருள் மற்றொரு சாரார் இவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage