
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
English Meaning:
The Lord is the Primal One;The root, the shoot, the plant and fruit;
Thus He blesses all life;
To each, He grants his life`s pleasure,
With each, He stands according.
Tamil Meaning:
மரவகைகளுள் சில, கிழங்காய் நின்றே பயன் படும்; சில, முளையானபின் பயன்படும்; சில, முளைக்குப் பின் புதலாய் நின்று பயன்படும்; சில, காய்த்துப் பழமாய்ப் பயன்படும். அந்த அந்த மரவகைக்கு அந்த அந்தப் பொருளே உளதாகிப் பயன் தருதல்போலச் சிவபெருமான் மக்கள் உயிர்க்கேயன்றிப் பிற உயிர்கட்கும் அவ்வவற்றின் தோற்றத்திற்கு ஏற்ப அத்தோற்றப் பொருள்களாய் நின்று அவற்றைத் தோற்றுவிப்பன்.Special Remark:
`எல்லா மரங்களும் பழமாய்த்தான் பயன்படும் என்பதின்றிப் பல்வேறு வகையில் பயன்படுதல்போல, எல்லா உயிர்களும் மக்களேயாய் - அல்லது கருப் பையில் தோன்றுவனவேயாய் நின்று தோன்றும் என்பதின்றிப் பலவேறு வகையில் தோன்றும்` என்றற்கு இவ்வாறு உவமை கூறினார். `மரவகை` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. அதர் - வழி. இதனால், மக்கள் உயிர்களின் தோற்றத்தை இவ்வாறு செய்விக்கின்ற சிவபெருமான், பிற பிற உயிர்களையும் அவ்வவற்றிற்கு ஏற்ற பெற்றியால் தோற்றுவிப்பன் என்பது இதுபற்றி அறியப்படும் என ஒரு திருமந்திரத்தால் தொகுத்து உணர்த்தப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage