
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே.
English Meaning:
The seed of life,As a steady flame in womb burns
It takes shape one of three
Male, female and hermaphrodite;
How the father and mother at union were,
Even so He printed the sex,
Righteous indeed was that Luminous One.
Tamil Meaning:
மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப் பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.Special Remark:
தந்தை தாயரது வெண்டுளி செந்துளிகளை `வன்னி - நெருப்பு` என்றார், அவை அப்பூதத்தின் கூறாதல் பற்றி. அச்சு, வடிவை அமைப்பதாகலின் அதனைக் ``கற்பனை`` என்றார். `கற்பனையாக` என ஆக்கம் வருவிக்க. `பூண்பது` என்பது தொழிற்பெயர். வழி - வாயில்; காரணம். பதிவை ``பதி`` என்றது முதனிலைத் தொழிற்பெயர். ஆண்மை - ஆற்றல். ``ஆம்பதி`` என்றது இன எதுகை.இதனால், கருவைச் சிவபெருமான் மூவகை அச்சுப்பொருந்த அமைத்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage