
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

வகுத்த பிறவியை மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.
English Meaning:
Sakti, the Conjoint Cause of creation,The Luminous One that dispelled darkness total,
Together created the myriad lives,
Their genus and species,
And having done that, they pervaded them too;
Oh! magnificence non-pareil!
Tamil Meaning:
பாசஞானத்தைத் தருகின்ற உடம்பை வளர்க்கின்ற அம்மையும், நூல்களை மிக உணர்த்திப் பாச ஞானத்தைப் போக்கிப் பசுஞான பதிஞானங்களைத் தருகின்ற அப்பனும் செய்யும் செயல்களாவன முறையே, ஐம்புலன்களைப் பகுத்துணரும் வகையில் உயிர்கட்குப் பலவகைப் பிறப்புக்களைத் தருதலும், அவற்றின் அறிவுக்கறிவாய் நிற்றலைப் புலப்படுத்துதலும் ஆகும்.Special Remark:
`பிறவியை வகுத்த` என மாற்றிக்கொள்க. தொகுத் தற்குச் செயப்படுபொருள் மேல் (தி.10 பா.468) `வேதம் முதலாக இசைந்த பரப்பினை` என்பதனால் பெறப்பட்டது. அருளை அம்மையாகவும், சிவனை அப்பனாகவும் கூறும் முறை பற்றியும் உடலை வளர்ப்பவள் தாயும், அறிவை வளர்ப்பவன் தந்தையுமாகச் சொல்லப்படும் வழக்குப்பற்றியும் `அருளே பிறப்பைத் தருவது` எனவும், `சிவனே வீடு தருபவன்` எனவும் இருபொருளும் வேறு வேறுபோலக் கூறினார். அங்ஙனம் கூறினாராயினும், `இருபொருளும் ஒன்றே` என்பது மேலைத் திருமந்திரத்தால் இனிது விளக்கப்பட்டது. ``வகுத்த, நீக்கிய`` என முன்னர் உடம்பொடு புணர்த்தலால் பொது வாகச் சுட்டிய வற்றைப் பின்னர்ச் சிறப்பாக இனிது விளக்கினார் என்க.இதனால், கண்ணுதல்தானே உயிர்களைக் கட்டியும், அவிழ்த்தும் நிற்குமாறு (தி.10 பா.467) கூறப்பட்டது. அஃதாவது திரோதான சத்தி வழியே கட்டுப்படுத்தும், அருட் சத்தியால் வீடுபெறு வித்தும் நிற்பான் என்றவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage