
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.
English Meaning:
The eight constituents of body subtleThat ultimately leave;
The eight and ten Tattvas that sneak in,
With Purusha in them immersed
The orifices nine,
The Kundalini that serpent-like coils,
—If these, the Divine Charioteer drives not in,
Verily may the infant be less than human (say, a pig).
Tamil Meaning:
குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாதுவிடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.Special Remark:
போகின்ற எட்டு, உயிரோடு ஒட்டிச் செல்கின்ற சூக்கும சரீரத் தத்துவங்கள். புகுகின்ற பத்து எட்டு, கருவில் வந்தபின் வருகின்ற மேற்சொன்ன (தி.10 பா. 449) பதினைந்துடன் `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` என்னும் முதல் நாடிகள். மூழ்கின்ற - ஆன்மா அழுந்துகின்ற. `முத்தனுவும்` என்பது குறைந்து நின்றது. முன்பு, `எட்டும், பதினெட்டும்` எனவும், பின்பு, `ஒன்பது வாய்தலும்` எனவும் கூறினாராயினும், `அனைத்துக் கருவிகளும் மூவுடம்பாய் அடங்கு கின்றன` என்றற்கு, ``முத்தனுவும்`` என்றார். குண்டலினி மூலாதாரம் முதலாகப் பிரமரந்திரம் ஈறாகத் தலைகீழாக நிற்கும் பாம்பு வடிவாய் இருத்தலின் அதனை, ``நாகம்`` என்றார். ``புரவி`` என்றது, இடைகலை பிங்கலை வழிச் செல்லும் பிராண வாயுவை. அஃது ஆகுபெயராய், அதற்கு இடமாகின்ற அந்நாடிகளைக் குறித்தது. விடுதல் - தூண்டுதல். ``பன்றி`` என்ற இழிவு வகையால் பயன்படாமை குறித்தவாறு.இதனால், சிவபெருமான் உயிர்ப்பு வழியாகப் பருவுடம்பை நிலைப்பித்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage