
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே.
English Meaning:
As when flower blossoms, the breeze spreads fragrance,In space all around
So does Prana over Jiva extend,
Gently unfolding at the time destined.
Tamil Meaning:
பூவின் மணத்தைக் காற்றே உலகிடை எங்கும் பரவச்செய்தல்போல, நுண்ணுடம்பின் செயல்களைத் தச வாயுக்களே பருவுடம்பில் கூவி அழுதல் முதலிய தொழில்களாக நிகழச் செய்யும், அவ்வாறு செய்விக்கச் சிவபெருமான் நினைந்தபொழுது.Special Remark:
தசவாயுக்கள், `பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பன. சீவன் - உடம்போடு கூடிய உயிர். அஃது இங்கு உடம்பையே குறித்தது. `பிராணன் முதலிய வாயுக்கள் இல்லையேல் நுதலிலும், உச்சியிலும் நிற்கும் அந்தக்கரணங்களின் ஆற்றல் பயன்படாது` என்பதாம். கூவி அழுதல் - அழைத்து அழுதல். `அவிழும்` என்பது பாடம் அன்று. பிறந்த குழவிக்கு முதற்செயல், வாய்விட்டு அழுதல். ஆதலின், அதனையே எடுத்தோதி ஏனைய வற்றை உடன்கொள்ள வைத்தார். நுண்ணுடம்பின் செயலாற்றலே தூல உடம்பில் செயலாக வெளிப்படும். அதற்குத் துணைசெய்வன தச வாயுக்கள் என்க.இதனால், குழவி பிறந்தபின் அதனைச் சிவபெருமான் தச வாயுக்களின் வழிச் செயற்படுத்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage