
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீரதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே.
English Meaning:
You know not the six afflictions within;Seek the great good that wells therein;
Understand the Siddhis within them;
Know this,
The fleshy body is but of the five elements.
Tamil Meaning:
உலகீர், வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகளாகிய ஆறும் கருவிலே அமைக்கப்பட்டன என்பதை அறியமாட்டீர். அதனால், அவற்றில் அழுந்துதலின்றி நீங்கமாட்டீர். அவ்வுடம் பிற்றானே நல்லன பல பெருகுமாற்றையும், சிவபெருமான் அந்நல்லனவற்றால் பல பயன்கள் விளைய வைத்திருத்தலையும் உணர்ந்து அடையமாட்டீர்; ஆயினும், நீவிர் அனைவீரும் பிண்ட மாகிய உங்கள் உடம்புகள் தாயர்தம் வயிற்றில் பத்துமாதம் தங்கி வளர்ந்து வந்ததை அறிவீர்கள்.Special Remark:
`அதனால் பயன் என்னை` என்பது குறிப்பெச்சம். வாழ்வில் நிகழும் ஆறு மேலே சொல்லப்பட்டன. (தி.10 பா.440) `அதனில்` என்பதில் சுட்டு, ஆக்கத்தைக் குறித்தது. குணங்கள் தன்மைகள். அவை அறவுணர்வும், இறையுணர்வும் பற்றி எழும் விருப்பமும், செயல்களும். சித்திகள் - அவற்றின் பயன்கள். `இட்டது, ஆனது` என்பன தொழிற் பெயர்கள். `ஏனையவற்றை அறியாவிடினும், பிண்டம் பத்து மாதம் தங்கிப் பிறந்ததை அறிவீர்` என இகழ்ந்தவாறு. இவ்விகழ்ச்சி, முற்கூறிய அறியாமைபற்றியதாதல் அறிய.இதனால், சிவபெருமான், `வேம்பினோடு தீங்கரும்பும் விரவி ஊட்டுதல்போல` (தி.7 ப.46 பா.2) உயிர்கட்கு வினைப் போகத்தை நுகர் வித்தலோடு, மெய்யுணர்வைப் பெறுவித்தற்பொருட்டும் உடம்பைக் கருவினில் தோற்றுவித்துக் காத்துத் தருகின்றான் என அதன் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage