
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
English Meaning:
There in the pregnant womb,The soul lay in Primordial quiescence (Turiya State)
From that State Maya and Her tribe aroused it;
And conferred Consciousness;
And Maya`s evolutes eight—Desires and the rest,
Thus say scriptures, holy and true.
Tamil Meaning:
கருப்பையுள் முதற்கண் அதீத நிலையில் உள்ள குழவிக்குப் பின் `மாயை` (அசுத்த மாயை) என்பவள் தனது சுற்றமாகிய வித்தியா தத்துவங்களைச் சேர்ப்பிக்கத் துரிய நிலையைப் பெறும். பின்பு அத் துரிய நிலையும் நீக்கிச் சுழுத்தி சொப்பன சாக்கிரங்களாகிய நிலைகள் கூடுமாறு வலிமை மிக்க வினைப் பயன்களாகிய `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம்` என்னும் பாவங்கள் எட்டும் மாயேயமாய்ப் பொருந்தும். அதனால், குழவி தனது வினை நுகர்ச்சிக்குரிய தன்மைகள் யாவும் நிரம்பப் பெறும்.Special Remark:
``மாயாள்`` எனவும், `கிளை` எனவும் உருவகமாக்கிக் கூறியது, குழவியது அறிவைச் செவிலிபோல வளர்த்தல் தோன்றுதற்கு. `துரியமும்` என்பதும் பாடம். `கான்மிகம்` என்பது ``காமிகம்`` என நின்றது. தன்மம் முதலிய புத்தி குண பாவங்களைக் கூறியது குழவி நிரம்பிய வளர்ச்சி உடையதாதலைக் குறித்தவாறு. `பொருந்தும்` என்பது சொல்லெச்சமாய் நின்று ``எழ`` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று. `மாயேயம் எட்டாதல் பொருந்தும்` என மாற்றி உரைக்க. `மறை வாக்குப்போலச் சொல் உளதாம்` என்க. அஃதாவது `தெளிவான உணர்வுநிலை உளதாம்` என்றபடி. இதனால், சிவபெருமான் குழவிக்கு உணர்வு நிரம்பச் செய்யுமாறு கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage