
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
பதிகங்கள்

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.
English Meaning:
Into the Union, the Holy One entered;Gathering Tattvas five and twenty
Fashioned the (five)-sheathed body;
Munificent indeed was his gift!
A veritable Bundle of Delusion He made.
Tamil Meaning:
ஒருவன், ஒருத்தி ஆகிய இருவரது இன்பநுகர்ச்சிக் காலத்தில் கருவைத் தோற்றுவிக்கப் புகுந்த சிவபெருமான், அவ்வொருத்தியது கருப் பையினுள் ஓர் உடம்பைக் கொணர்ந்து வைத்த கொடைத் தொழிலாலே வெள்ளிய துளிகள் பலவற்றுள் ஒரு துளியின்கண்ணே முப்பத்தொரு கருவிகள் ஆகிய மாயா காரியங்கள் சேர, அவற்றால் முதற்கண் ஒரு பிண்டத்தை அமைக்கின்றான்.Special Remark:
மோகம் - மோகினி. ஆன்ம தத்துவத்திற்கும் இது வழிமுறையாற் காரணமாதல் பற்றி இதனையே கூறினார். `இரண்டெட்டும், மூவைந்துமாகிய மோகத்துள்` என்க. மோகம், கருவியாகுபெயர். ``கோசம்`` என்பது உயிரெதுகை.இதனால், பரசரீரத்துள் குண சரீரமே யன்றிக் கஞ்சுக சரீர காரண சரீரங்களும் கூட்டப்படுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage