
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.
English Meaning:
Signification of Five-Lettered Mantra in Siva Dance``Leave this, be reformed,``
—Thus to Jivas, gestures one hand in letter ``Si;``
``Come like me, Be united in me``
—Thus to Tapasvins gestures another flower-like hand in letter ``Va;``
``Be in, Deva, fear not.
Thus to Celestials gestures, the golden hand in letter ``Ya.
The hand that holds fire
Gestures the letter ``Na;``
The foot on earth planted in dance
Gestures the letter ``Ma;``
(Thus is the entire Five-Letter Mantra ``Si Va Ya Na Ma``
Is Divine Dance denoted. )
Tamil Meaning:
சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால். அதில் உதறிய கையை, மாயையை, `சீ` என்று உதறும் கையாகவும், வீசி அணைத்த கையை, அடியவனை, `வா` என்று அழைத்து அருள் வழங்கும் கையாகவும், சார்ந்தவிடத்து, `அஞ்சற்க` என அமைந்த கையை, `இனிதிருக்க` எனத்தேற்றம் தரும் கையாகவும், தீ ஏந்திய கையை, வினைகள் கெடத் திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகவும், ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகவும் காணுதல் வேண்டும்.Special Remark:
திருவைந்தெழுத்தில் உள்ள எழுத்துக்களின் சிலேடை தோன்ற உண்மை யுணர்த்தியவாறு. உதறுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இங்குக் கூறியவற்றில் அமைந்துள்ள எழுத்துக்களை வருகின்ற மந்திரத்துள் ``உதறிய கை, அணைத்த கை, `இய` என்ற கை`` - என உடம்பொடு புணர்த்து ஓதப்பட்ட பொருள்கள் இனிது விளங்க வெளிப்படையாக உரைக்கப்பட்டன. ``தீ, நிலை`` என்பன ஆகுபெயர்களால் அவற்றையுடைய கையையும், அடியையும் குறித்தன. ``ம்`` என்றது, மலத்தை அதன் முதலெழுத்துக் குறிப்பாற் கூறினார். `மவ்வை மிதித்தல்` என ஒரு சொல் வருவிக்க. வேண்டும் இடங்களில் எல்லாம் `ஆக` என்பது வருவித்து, அவற்றை ``ஆகும்`` என்பதனோடு முடிக்க. ``திருந்து அத் தீ ஆகும்`` என்பதை, `அத் தீ திருந்து ஆகும்` என மாற்றி உரைக்க. திருந்து - திருந்துதல்; அஃதாவது, தற்போதத்தால் வினைகளைச் செய்யாது திருவருள் வழி நிற்றல். முதனிலைத் தொழிற்பெயர் ``இய`` என்றது, `இயல்` என ஏவியதனைக் குறித்தது. ``ஆகும்`` என்பதைப் பின்னரும் கூட்டுக.இதனால், திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறைகளுள் ஒரு வகை முறை கூறப்பட்டது.
``மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி,அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனன்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்``.*
என்னும் உண்மை விளக்க வெண்பாவை இங்கு ஒப்பு நோக்கி உணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage