
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.
English Meaning:
He is Kalpaka Tree that Grants All WishesAbove jewelled crowned heads of Celestials,
Are the flowery Feet of Lord,
A precious Jewel is He;
He adorns the rising heart of His loving devotees;
He is Tree Divine (Kalpaka Tharu)
Of Heavenly glades;
He transcends worlds all.
Tamil Meaning:
கற்பக மலர் மாலையை அணிந்த முடியை உடைய தேவர்களது தலைமேல் இருப்பனவாகிய, மாணிக்கம்போலும் சிவபெருமானது இருபாதங்களும், தகுதி வாய்ந்த அணியாகிய அன்பை உடையவர்களது உள்ளத்திலே விளங்கும் கற்பகத் தருவும், சிந்தாமணியும் ஆகும். ஆயினஉம் அவன் உலகத்தைக் கடந்தே யிருக்கின்றான்.Special Remark:
`கற்பகத்தரு இரந்தவற்றைக் கொடுக்கும்; சிந்தாமணி பெற நினைத்தவற்றைக் கொடுக்கும். உலகத்தைக் கடந்து நிற்கின்றவன் அன்பர்கள் உள்ளத்தில் கற்பகத் தருவும், சிந்தாமணியும் போல இருத்தல் கருணையினாலேயாகலின், அவன் மேற்கூறியவாறு எங்கும், எஞ்ஞான்றும் ஆடுதல் கருணையினாலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.`தாமமூடி` என்பது, ``தாமுடி`` எனக் குறைந்து நின்றது. அதனால் தேவர்களது தலையினது உயர்வு குறிக்கப்பட்டது. `உறை தாளிணை` என இயையும். `உறை மாமணி` என இயைத்தலும் ஆம். ``தாள்`` என்பது, கால் முழுவதையும் குறிக்க ``அடித் தாள்`` என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய், பாதத்தைத் குறித்தது.
இங்கு ``அணி`` என்றதை, ``ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி``* என்பதிற்போலக் கொள்க. ``கடந்து நின்றான்`` என்பதற்கு, `அவன்` என்னும் சுட்டு வருவிக்க.
இதனால், ஞானம் கடந்து நின்றவன் சிலரது உள்ளங்களிலே விளங்கி, எண்ணியவற்றை எண்ணியாங்கு முடிக்கும் அற்புதம் கூறும் முகத்தால் அவனது கூத்து அற்புதமும் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage