
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.
English Meaning:
Seven Pedestals of Siva`s DanceThe universe vast,
The Tattvas numerous,
The Sadasiva,
The Sushumna central,
The Sakti Sakthavi,
The Sakti Sambhavi
The Sakti Kundalini
(That in Muladhara Plexus is)
—These seven are Siva`s pedestals;
On them He dances
He, the Being Transcendental.
Tamil Meaning:
உலகங்கள் ஏழு, சாதாக்கியம் முதலாகக் கீழ் நோக்கியும், மேல் நோக்கியும் எண்ண வருகின்ற தத்துவங்கள் ஏழு, `தண்டு` எனப்படுகின்ற சுழுமுனை நாடியில் உள்ள, `சத்தம்` எனப்படுகின்ற வாக்கிற்கு முதல்வியாதல் பற்றி சாத்தவியாம் குண்டலி சத்திக்குரிய ஆதாரங்கள் ஏழு, அவற்றிற்குமேல் `வியாபினி, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்னும் சிவசத்திகளது இடங்கள் ஏழு, யாழ், குழல் முதலிய வற்றினின்றும் எழுகின்ற இசைகள் ஏழு ஆகியவற்றை எல்லாம் தனது இடமாகக் கொண்டு சிவன் நடம் புரிகின்றான்.Special Remark:
`இஃது அற்புதம்` என்பது குறிப்பெச்சம். ``ஏழும்`` என்பது இறுதி நிலை விளக்காய், ஏனை எல்லாவற்றோடும் சென் றியைந்தது. `சதாசிவம் ஆதி தத்துவம்` என இயைக்க. `சிவ தத்துவம் ஐந்து` என்பதே பெரும்பான்மையாக எங்கும் சொல்லப்படினும் பரநாத பரவிந்துக்களைக் கூட்டி, `ஏழு` என்றும் சிறுபான்மை சில ஆகமங்களில் சொல்லப்பட்டது. ``ஆதனம்`` என்பதைச் ``சாத்தவி`` என்பதனோடும் கூட்டுக. `தண்டு` என்பது, ``தெண்டு`` என மருவி வந்தது. தண்டு - யாழ். உபலக்கணத்தால் குழலும் கொள்ளப்பட்டது. இறைவன் சொல்லும், பொருளும் ஆதலேயன்றி ஏழிசையாய், இசைப்பயனுமாய்8 நிற்றலும் நன்கறியப்பட்டது. ``சிவாசனம்`` என்பதில் `சிவன்` என்பது `தன்` என்னும் பொருட்டாய் நின்றது அன்றி, `மங்கலப் பொருட்டாய் நின்றது` என்றலும் ஆம்.இதனால், திருக்கூத்தின் வியாபக அற்புதம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage