
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே.
English Meaning:
Dance of the Form-Formless (Sadasiva)The Form that dances
Is Guru`s Form,
It is in sooth Formless;
That Formless One shines
As Sakti Tiripurai as well;
She verily is Uma
That is Form-Formless.
Tamil Meaning:
சிவபிரானது கூத்த வடிவமே சகல வருக்கத் -தினருக்குக் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் வடிவமும், திருக் கோயில்களில் மூலத் தானத்தில் எழுந்தருளியிருந்து வழிபாட்டினை ஏற்று அருள்புரியும் இலிங்க வடிவமும் ஆகும். இனி அவ்வடிவத்தின் பக்கத்தில் பெண்ணுருவாய் நிற்பவளும், மற்றும் சிவனுக்கு மூவகைத் திருமேனியாய் விளங்குபவளும் கூத்தப் பெருமானது சத்தியே.Special Remark:
`குனிக்கும் உருவமே குரு உரு; அன்றி, அரு உரு ஆவதும் அந்த உருவே` என இயைத்துக் கொள்க. புரம் - திருமேனி. புரை - திருமேனியாய் உள்ளவள். `உருவாய் வருவாளும்` என ஆக்கம் விரிக்க. ``உமையவள்`` என்றது, `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. இவ்வாறெல்லாம் கூறியது, கூத்தப் பெருமானை வணங்கும் வணக்கத்தின் பயனை நோக்கியாம்.இதனால், `கூத்தப் பெருமான் வணக்கமே அனைத்துத் திருமேனிகளின் வணக்கமாம்` என அவனது சமட்டி நிலை அற்புதம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage