
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.
English Meaning:
Bliss of Siva-Sakti Pair DanceThe Form of Sakti is Bliss-All;
Of equal Bliss is Uma`s Form;
Sakti`s Form rising in Siva`s Form
As one merged and one dance performed;
That peerless dance is bliss Perfect.
Tamil Meaning:
எல்லா உயிர்கட்கும் ஏற்புடையதாகிய `இன்பம்` என்பது `சத்தி` என்னும் கூறே. அதனால், எந்த இன்பப் பொருளிலும் உள்ள எந்த இன்பமும் `சத்தி` என்னும் கூறே. (பொருள், `சிவம்` என்னும் கூறாம்) இனி எல்லாத் திருமேனி வகைகளும் சத்தியே. அந்நிலையில் பெருமானது சத்தியால் தோன்றி நிகழ்கின்ற ஒப்பற்ற நடனம், முத்தியின்பமாகிய பேரின்ப நடனமாகும்.Special Remark:
`திருக்கூத்துச் சத்தியால் உண்டாகி, ஆனந்தத்தைப் பொழியும்` என்றபடி. சகலம் - எல்லாம். உம்மை, முற்று. இனி, `சகலம் சகலநிலை` எனவும் உரைப்பர். அவர் உம்மையை இழிவு சிறப்பாகக் கொள்வர். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல். `சகளத்து` என்பதில் `அத்து` அல்வழிக்கண் வந்த சாரியை. `சகளமாய் எழும்` என ஆக்கம் வருவிக்க. ``சகளம்`` என்பது, பொதுவாகத் `திருமேனி` என்னும் அளவாய் நின்றது. `எழுந்து ஒத்த ஒரு நடம் ஆனந்த நடனமாம்` எனக் கூட்டுக. இரண்டு - இருவினை `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `இரு வினை யொப்பு` என்பது உபலக்கணத்தால் மலபரி பாகம், சத்திநிபாதம், ஞான முதிர்ச்சி இவைகளைத் தழுவி `முத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. ஒத்த காலத்தில் நிகழ்வதை ``ஒத்த`` என்றே உபசரித்துக் கூறினார்.இதனால், திருக்கூத்து ஆனந்தக் கூத்தாதலாகிய அற்புதத்திற்குக் காரணம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage