
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.
English Meaning:
The Light of Astral Flower in the Dance TheatreThe shedding light
Of that Astral Flower Within,
Illumines the Dance Arena entire;
Wondrous indeed that Flower is;
Its petals four (in Muladhara)
Into a hundred petals blossomed (in Sahasrathala)
And into ten and two hundred worlds expanded,
In the interminable spaces vast.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அம்பலங்கள் தாம் அளவிலவாதல் பெறப்பட்டமையால், அவைகளில் விளக்கொளி போல விளங்கி ஆடும் மூர்த்திகளும் எண்ணிலர். இனி அந்த அம்பலங்கள் மலராக விளங்க, இருநூற்றிருபத்து நான்கு புவனங்கள் அவற்றின் இதழாக, நிலையின்றித் தோன்றியழிவன. ஆகவே, என்றும் நிலையாயுள்ள சத்தியே அவனுக்கு என்றும் உள்ளதாகிய அம்பலமாம். ஆகவே, இதுவே அவனுக்கு நன்றாய அம்பலமாகும்.Special Remark:
`மன்று நிறைந்த விளக்கொளி நூறு; அவை மாமலராக, இதழ் தான் நாலொடு இருபத்து இருநூறு உள; சென்றது; நின்றதுதான் நெடு மண்டலம்; இதுதான் நன்று` என இயைத்துப் பொருள் கொள்க.இதனுள் ``நூறு`` என்றது அளவின்மையைக் குறித்தது. `மலராக` என உவமம் குறித்த ஆக்கச்சொல் வருவிக்க. ``சென்றது`` என்றது பன்மையொருமை மயக்கம். `செல்வது` என எதிர்காலத்தாற் கூறற்பாலது, விரைவு பற்றி ``சென்றது`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. `நிற்பது` என்பதும் தெளிவு பற்றி ``நின்றது`` எனப்பட்டது. காலத்தின் நெடுமை அதில் உள்ள மண்டலத்தின்மேல் ஏற்றப்பட்டது. அம்பலத்தை, `மண்டலம்` என்றார்.
இதனால், அம்பலங்கள் பலவாயினும் உண்மை அம்பலம் சத்தியேயாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage