
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.
English Meaning:
Pandaranga Dance at the End of DissolutionThe drums beat, the pipes played,
``Aum``, they hummed;
The men danced,
``My Primal Lord!`` they said;
The crowd of Ganas in serried ranks praised;
The numerous Bhootas sang
—Thus He danced the Pandaranga,
—The Dance of Dissolution
At end of Tiripurai conflagration.
Tamil Meaning:
சிவனது பலவகைக் கூத்தில் `பாண்டரங்கம்` என்னும் கூத்து (திரிபுரத்தை எரித்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆதலின்,) ஒன்றோடு ஒன்று இயைந்து ஒலிக்கும் மத்தளமும், குழலும் `ஓம்` என்று ஒலிக்கவும், அந்நடனத்தின் குறிப்பை ஆராய்ந்து நோக்கிய பதினெண் கணங்களும் நிறைந்த பூதப்படைகளும் பல பாடல்களைப் பாடவும், அவர்களோடு மக்களும் கண்டு, `இவனே முதற்கடவுள்` என உணர்ந்து களி நடம்புரியவும் நிகழ்ந்தது.Special Remark:
``பூதங்கள் பாடியவாறு`` - என்றாராயினும், `பூதங்கள் பாட மானுடர் ... ... ... ஆடியவாறு` எனக் கூட்டி, `நிகழ்ந்தது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இதில், மானுடர் கண்டு தெரிந்து ஆடினமை சிறப்பாகக் குறிக்கப்பட்டது.``தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன்பாண்ட ரங்கமும்``3
என்பதற்கு,
``வானோராகிய தேரில், நான்மரைக் கடும்பரி பூட்டி நெடும் புறம் மறைத்து, வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன்னின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும்``
என்ற அடியார்க்கு நல்லார் உரையைக் காண்க. `பாண்டரங்கம்` என்பது கடைக் குறைந்து நின்றது.
இதனால், திருக்கூத்து வகைகளில் ஒன்றன் அற்புதம் எடுத்தோதி விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage