
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
வைத்த சராசரம் ஆட மறைஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.
English Meaning:
Dance of Ananda (Bliss)The Tattvas danced; Sadasiva danced;
The Thought danced; Siva-Sakti danced;
The creation vast danced; the Vedas danced;
The Lord too danced,
The Dance of Ananda (Divine Bliss).
Tamil Meaning:
முன் மந்திரத்தில் கூறியபடி பசு பல நிலைகளில் செயற்படும்படி சத்தி ஆடுதலால், சிவனும் அதற்கு இயையப் பல நிலைகளில் நின்று ஆடுகின்றான்.Special Remark:
ஐந்தொழிற்கும் முதல்வன் சதாசிவன் ஆதல்பற்றி அவனை வேறு பிரித்துக் கூறினார். சித்தம் - உயிர்களின் அறிவு. சராசரம் - பிறப்பு வகைகள். ``சிவசத்தி தான் ஆட`` என்பதை மூன்றாம் அடியின் ஈற்றில் வைத்து, `அவள் ஆட, அத்தனும் ஆனந்தக்கூத்து ஆடினான்` என முடிக்க. காரியப்பொருளில் வந்த ஏனை, `ஆட` என்னும் எச்சங்கள். `சிவசத்தி தான் ஆட` என்பதனோடு முடிந்தன. `தான்` இரண்டும் அசைகள். சத்தி, இங்கு ஆதி சத்தி.இதனால், திருக்கூத்துக்கள் யாவும் சத்தியின் நிலைகட்கு ஏற்ப நிகழ்த்தப்படுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage