
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.
English Meaning:
He Danced in Vedanta-Siddhanta TruthSiva danced, Sakti danced,
The worldly desires danced;
The space that dances not danced;
The Tattva-Nadanta wondrous danced;
When Siva danced inside of Truth,
That indeed is Vedanta-Siddhanta.
Tamil Meaning:
சிவ முதற்பொருள், தான் செய்வோனாய் நின்று சங்கற்பிக்க, அச்சங்கற்பந்தானே சத்தியாகிப் பலவகையில் நிற்க, அதனால் உலகத்தில் தீயனயாயும் நிலைகெட்டு நீங்கும் நிலையை எய்த, உலகில் அசைவற்றதாக எண்ணப்படுகின்ற ஆகாயமும் ஒலி அலைகளைத் தோற்றுவித்துச் செயற்பட, புதிது புதிதாய்த் தோன்றி யமைகின்ற தத்துவங்கள் நிலம் முதல் நாதம் ஈறாக நின்று செயற்பட எப்பொழுதும் ஆடும் இவ்வுண்மை வேதாந்தத்திலும், சித்தாந்தத் திலுமே காணப்படும்.Special Remark:
`பிறவற்றில் காணப்படாது` என்றதாம். அஃதாவது, `புறச் சமயிகள் இதனை உணரார்` என்றதாம். ஈற்றில் உள்ள ``சிவம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. முதற்கண் உள்ள `சிவம் என்பது செய்வோன்` என்னும் பொருட்டாய் நின்றது. அதன்கண், `சிவமாய்` என ஆக்கம் வருவிக்க. ``சிவம் ஆட`` என்பதில் ஆடுதல், சங்கற் பித்தல், ``நாதாந்தம்`` என அந்தம் கூறவே, நிலமாகிய ஆதியும் பெறப் பட்டது. ``வேதாந்த சித்தாந்தம்`` என்பது உம்மைத் தொகை. `உள்ளது` என்பதில் இறுதிநிலை தொகுக்கப்பட்டு, ``உள்`` என நின்றது.இதனால், திருக்கூத்தின் அற்புத நிலை வேதாந்த சித்தாந்தங்களிலே விளங்குதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage