
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர தேயத்தே
ஆடிய நந்தி புறம்அகத் தானே.
English Meaning:
He Dances Inside and Outside the HeartWith the accompaniments eleven
That dance has,
With anklet feet and drum in hand,
The Nada reverberated,
And reached like Para-Para in High Heaven;
The Holy Nandi that thus danced,
Is verily inside your heart and outside too.
Tamil Meaning:
கூத்துப் பதினொன்றின் உறுப்புக்கள் எல்லாம் முறையாகக் கூடிய பாதத்தில் அணியப்பட்டுள்ள சிலம்பும், கையில் கொண்டுள்ள உடுக்கையும் ஒலியை எப்பொழுதும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக, மேலானவற்றிற்கெல்லாம் மேலான இடத்தில் ஆடுபவனாகிய சிவன் எல்லா உலகிலும் உள்ள உயிர்களின் அகத்தும், புறத்தும் ஆடுகின்றான்.Special Remark:
ஆடல் பதினொன்றாவன, `அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்` என்னும் நின்றாடல் ஆறும், `துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை` என்னும் வீழ்ந்தாடல் ஐந்துமாம். இவற்றிற்கு உரிய உறுப்புக்கள் முறையே ஆறு, நான்கு, நான்கு, ஐந்து, ஆறு, ஐந்து, ஐந்து, ஆறு, நான்கு, நான்கு, நான்கு, இரண்டு. இவற்றின் இயல்பெல்லாம் ஆடல் நூலுள் (பரத சாத்திரத்தில்) சொல்லப்படும். சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக்காதை உரைகளில் சிறிது காண்க. `எல்லா ஆடலும் எல்லாரும் வல்லராகார்; சிலர் சிலர் சில சிலவே வல்லவராவர்; சிவன் எல்லா ஆடலும் வல்லன்` என்பதும் `ஆயினும் அவ்வாடல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவன்` என்பது கூறியவாறு `நாதம் நீடிய` என மாறுக. நீடிய - நீடின. நேயம் - விருப்பம். அது விரும்பப்படும் இடத்தைக் குறித்தது.இதனால், `சிவன் ஒருவனே ஆடல் வல்லான்` ஆகும் அற்புதம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage