
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.
English Meaning:
THE GLORY OF THE HOLY HYMNS THREE THOUSANDPath To God
Three Thousand Holy Hymns, Mula in Tamil composed,
Did he, Nandi, reveal for all the world to know,
Those who wake early at dawn and sing understanding the meaning
Will win the splendid soft repose
Of the Bosom of the Lord.
Tamil Meaning:
மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.Special Remark:
``மூலன்`` என்றது தம்மைப் பிறர்போலக் கூறியவாறு. ஞானசம்பந்தரும், நம்பியாரூரரும் தம் பதிகத்திறுதியில் இவ்வாறு கூறுதல் காண்க. இங்ஙனம் நாயனார் ``மூவாயிரம் தமிழ்`` என்றமை யானும், மேல் ``மந்திர மாலை`` என்றமையானும் சேக்கிழார், ``நற்றிரு மந்திரமாலை`` எனவும், ``தமிழ் மூவாயிரம் சாத்தி`` எனவும் கூறினார் என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage