
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.
English Meaning:
From Siva`s Seat To EarthI have come by the great path of Kailas,
In the line of the Lord who expounded the above truths,
Who is eternal, Truth effulgent, limitless;
Nandi, the Blissful One who dances joyously.
Tamil Meaning:
இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெரு மானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.Special Remark:
பரமாகும் சோதி, பெருமையன், ஆனந்த நந்தி என்பனவும் சிவபெருமானையே குறித்தன. `வளப்பம்` என்பது, `வளப்பு` என நின்றதுListen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage