
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.
English Meaning:
Form-Formless Sadasiva StateWith Nandi`s Grace I sought Moolan,
With Nandi`s Grace I Sadasiva became,
With Nandi`s Grace Truth Divine attained,
With Nandi`s Grace I so, remained.
Tamil Meaning:
சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றிநின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்திநிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.Special Remark:
``மூலனை நாடி`` என்றது வழிமொழிதல். `ஆகமத்தை அருளிச்செய்தவர் சதாசிவ நாயனார்` என்றல் பற்றித் தம்மை அவ்வாறு கூறினார். `சீவன் முத்தி நிலையிலிருந்தே இதனைச் செய்கின்றேனாதலின், இது, சிவன் மொழியேயன்றி என்மொழி யன்று` என்பதாம். உலகம் உய்தல் காரணமாக அருளாளர் இங்ஙனம் பட்டாங்குக் கூறுவனவற்றை நம்மனோர் சொற்போலத் தற்புகழ்ச்சி என்றல் கூடாமை அறிக. இது பற்றி யன்றே `நிறைமொழி மாந்தரா யினார் சில சொற்களை ஆணையாற் கிளப்பர்` (தொல் - செய்யுள் - சூ. 178) என்றதூஉம் என்க. `பல்லாண்டுகள்` என்பது ஆற்றலான் வந்தது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage