
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
English Meaning:
IN HUMILITYInfinite Greatness!
Who can know the greatness of our Lord!
Who can measure His length and breadth!
He is the mighty nameless Flame;
Whose unknown beginnings I venture to speak.
Tamil Meaning:
எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணர வல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.Special Remark:
``ஒன்று`` எனச் சிவபெருமானையே வேறு போலக் கூறினார். மெய்ம்மையை, ``வேர்`` என்றார். `அறியாமல்` என்றது, `முற்ற உணராது சிறிதுணர்ந்த அளவிலே` என்றவாறு. `அறிந்த அளவில் செய்கின்றேன்` என்றபடி. விளம்புதல் - பலரறியக் கூறுதல்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage