
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.
English Meaning:
ScripturesOut of the Books that are read by heart Vedas are the Greatest one. This Scripture is equivalent to that of Vedhas which came out of my body with the blessings of Lord shiva.
Tamil Meaning:
மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.Special Remark:
`தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு நியமித்து அதற் கேற்ற உடம்பைக் கொடுத்துக் கருத்துக்களையும் தோற்றுவித்தான்` என்றபடி. `உற்பத்தியும்` என்ற உம்மை தொகுத்தல் பெற்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage