
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
English Meaning:
THE GURU HIERARCHYWhen exploring who are the teachers blessed by Nandi Peruman, the four who are alike with him, the Shiva Yoga Munis, Patanjali who worshipped at Thillai Ambalam, and Vyaghrapada are included with me, making eight in total."
Tamil Meaning:
நந்திபெருமானின் அருளைப் பெற்ற ஆசிரியர்கள் யாவர் என்று ஆராய்ந்தபோது, அவருடன் ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தில் வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்னுடன் சேர்ந்து எண்மருமவர் என்பது புறம்.Special Remark:
ஆசிரியரை, நாயனார் `நாதர்` என்கின்றார். ``நமச் சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க`` என்ற திருவாசகம் இங்கு நினைக்கத் தக்கது. நந்தி பெருமானோடு ஒத்தமை, சீகண்ட பரமேசுரன் பால் அறம் முதலிய நான்கையும் கேட்டமையாலாம். `அந்நான்கையும் உணர்த்துவன வேதங்கள்` என்பது முதல் திருப்பாட்டின் உரையுட் காட்டப்பட்டது. அறமுதலியவற்றோடு ஒருங்கோதிய வீட்டுநெறி பொதுவகையானன்றிச் சிறப்பு வகையான் அன்மையின், அதனைச் சிறப்பு வகையான் இனிதுணர்ந்து அடைய அப்பெருமான் அவர் களை, நந்தி பெருமான்பால் கேட்க என விடுத்தவண்ணம் அவர்களும் நந்தி பெருமான்பால் ஆகமவழியாக வீட்டு நெறியைச் சிறப்பு வகையாற் கேட்டுணர்ந்தார். ஆகவே, அவர்கள் நந்தி பெருமானோடு ஒருங்கொத்த மாணவராய், முதிய மாணாக்கரிடம் இளைய மாணாக்கர் கேட்கும் முறையிற் கேட்டனர் என்றற்கு, ``நந்திகள் நால்வர்`` என்றார். அவர்களை `சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர்` என்ப. சிவயோகமுனி என்பவரைப் பற்றிப் பிற நூல்களில் ஓரிடத்தும், ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் அவரைப்பற்றி யாதும் அறிதற்கில்லை. சிலர் இவரை `அகத்தியர்` என்றும், `துருவாசர்` என்றும் கூறுவர். அவ்வாறாயின், நாயனார் அப்பெயரால் கூறுதலல்லது பிறவாறு கூறார் என்க. எனவே, சிவயோக முனி என்பது பெயரேயன்றித் தன்மை கூறுவதன்று என்க.பதஞ்சலியாரும், வியாக்கிரரும் தமிழ்நாட்டோடு தொடர் புடையவர் என்பதற்கு, ``மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்`` என்றார். எனவே, மன்று தொழுத என்னும் அடைமொழியைப் பதஞ்சலிக்கு மட்டுமே உரியதாக வைத்து அஃது யோகநூல் பதஞ்சலி யாரினை வேறு படுத்தற்குக் கூறப்பட்டது என்றல் பொருந்தாதாம். ஆகமத்துள் யோக பாதமும் உளதாதலின், அதனையே இப் பதஞ்சலியார் செய்யப் பின் வந்தோர் அதனை நன்குணராது வேறு கூறினமையின் அது, `பாதஞ் சலம்` என வேறு மதமாயிற்று எனக் கொள்ளுதலில் தவறில்லை. பொருட்பெற்றியை இனிதுணர்த்துவது ஞானபாதமேயாதலின், யோக பாதத்துட் கூறப்பட்ட தத்துவங்கள் சிறிது சுருங்கியிருத்தல் கூடும். மன்று தொழுது நின்றமையால் நூல்செய்தல் கூடாதென்பது இல்லை யன்றோ! நாயனாரும் மன்று தொழுதவராதல் பின்னர்க் காணப்படும்.
இங்குக் கூறப்பட்ட எண்மரும் ஒருகாலத்தே நந்தி பெரு மானிடம் ஞானம்பெற்றனர் என எண்ணுதல் கூடாது. நந்திகள் நால் வரும் முதற்கண் பெற்றனர் என்றும், சிவயோக மாமுனி அதற்குப்பின் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும், அவருக்குப்பின் பதஞ்சலி வியாக் கிரர் இரு வரும் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும் இறுதியாக இவ்வாசிரியர் பெற்றனர் என்றும் கொள்ளற்பாலன. ``மன்று தொழுத`` என இறந்த காலத்தால் கூறினமையின், முன்னே மன்று தொழுது பின்னர் அதன் பயனாக நந்தி பெருமானை அடைந்து ஞானம் பெற்று மீண்டனர் என்பது பெறப்படும். வியாக்கிரர் மூத்தோராகவும், வழி பாட்டில் பெரும்பற்றுடையராகவும் சொல்லப்படுதலால், தில்லை, `பெரும்பற்றப்புலியூர்` என அவர்பெயராலே வழங்கப்பட்டது. பதஞ் சலியாரும் அத்தலத்திலே தங்கி யோகநூல் செய்தார் என்க. வியாக் கிரர் நூல் செய்திலர். வியாக்கிரர் வசிட்ட முனிவர்தம் தங்கையை மணந்து பெற்ற உபமன்னிய முனிவர் இமயத் தாழ்வரையிலே பிறந்து சிறிது வளர்ந்து, பின்னர்ச் சில்லாண் டுகள் தில்லையில் தந்தையார்பால் வளர்ந்து பின்னர்த் தவத்திற்கு உரியராய காலத்து மீளவும் அத்தாழ் வரைக்கண்ணே சென்று தங்கினார் என்க. உபமன்னியரை யாதவன் - துவரைக் கிறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தான் என்று சேக்கிழார் அருளிச் செய்தமையால் இம் முனிவர் பாரத காலத்தவர் என்பது பெறப்படும். இருக்கு என வழங்கப்பட்ட ஆரிய மந்திரப் பாடல்களை, இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வியாச முனிவர் முறைப்படுத்து நான்காக வகுத்து பிராமணம், உபநிடதம் என்ப வற்றையும் அவற்றுக்கு உரிமை செய்து அனைத்திற்கும் வேதம் எனப் பெயரிட்டதும் பாரத காலத்திலேயாம். அதன் பின்னரும் உப நிடதங்கள் தோன்றின என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage