
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.
English Meaning:
Nandis Attain Celestial State``The Heavens in eight directions may rain,
Yet shall you the Holy rites and pure perform;``
So spoke He of the cool matted locks and coral hue,
And His Grace conferred on the steadfast Four.
Tamil Meaning:
தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.Special Remark:
அதனால் அவர்கள் என்றும் அவனோடு இருப்பர் என்றவாறு. எழுந்து நீர் பெய்வன ஏழுமேகங்களும். அவைவிடாது பெய்யினும் என்றது, ஊழிக் காலத்தும் என்றவாறு. எட்டுத் திசையும் பெய்யினும் என முன்னே கூட்டுக. மூன்றாம் அடி சிவபெருமான் காட்சி வழங்கினமையைக் குறித்தது. ஆசான் மூர்த்தி வாயிலாக அருள்செய்தபின்னர் நேர்நின்று அருள்புரிந்தார் என்பதாம்.நந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பிலராயினார் எனக் கூறி, `இந்த எழுவரும் என்வழியாமே` எனத் தமது மரபினை எடுத்துக் கூறிப்போந்தமையால், ஏனை மூவரும் இவ்வாறே தம் தம் மாணாக்கர் சிலரால் நந்திமரபினை நிலைபெறுத்தினர் என்பது கொள்ளக் கிடக்கின்றது. எனினும், இன்று சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலைபெற்றுளது என்க.
மேல் ஆசிரியமரபுவகை பலவற்றையும் கூறிய நாயனார் இனி அவற்றுள் ஒன்றன் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்தற்பொருட்டுச் செய்யும் இந்நூலாசிரியர் வரலாறு விளங்குதற் பொருட்டுத் தம் வரலாற்றைக் கூறுகின்றார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage