ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

நூற் சிறப்பு
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

English Meaning:
Immortal Gods Adore
I revere the greatness of Lord Shiva, who stands equal among the countless gods, is eternally worshipped by all, and remains an enigma even to those who seek Him. I immerse myself in His essence, understanding and praising Him from within.
Tamil Meaning:
தினந்தோறும் எண்ணற்ற தேவதைகளில் ஒருவர் போல அவர் அவர்களோடு இணைந்து நிற்கிறார். எனினும், அவர் அனைவராலும் நிரந்தரமாக வணங்கப்படுபவர். அவனை அடைந்தவர்களால் அவர் முழு தன்மையையும் புரிந்து கொள்ள முடியாத அரியவனும். இவ்வாறு இந்த மேன்மையான சிவபெருமானின் பெருமையை நான் அவனுள் இணைந்து உணர்ந்து துதிக்கின்றேன்.
Special Remark:
`உலப்பிலி தேவர்கள்` என்றது தாப்பிசையாய், முன்னும் சென்று தொகைநிலை வகையான் இயைந்தது. இலி என்பது இன்மையென்னும் பொருட்டாய் அதனையுடைய பொருண்மேல் இந் நூலுட் பயின்றுவரும். திகம்பரன் என்னும் பொருட்டாகிய `நக்கன்` என்பது வியாபகனாதலைக் குறித்து, ஏனையோரால் ஏத்தப்படுதற் குரிய இயைபு உணர்த்தி நின்றது. நம்பன் - விரும்புதற்குரியவன். `பழை யோன்` என்றும் ஆம். `நாள்தொறும் ஏத்திடும்` என முன்னே கூட்டுக./n
`பக்கம் நின்றார்` என்றது சீவன் முத்தரையும், பரமுத்தரையும். `பக்கம் நின்றாரும்` என்னும், சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. நாதன், பரமன் என்பனவும் மேலனபோல ஆகுபெயர்கள். இறைவனது பெருமை முத்தராலும் முற்றும் அறியப்படாது என்பதனை,/n
கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்/n
கடல்அளக்க வாராதாற் போலப் -படியில்/n
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்/n
கருத்திற்குச் சேயனாய்க் காண். -திருக்களிற்றுப்படியார். 90/n
என்பதனான் அறிக./n
புக்கு நின்று என்றது அதீத நிலையையும், உன்னி என்றது துரியநிலையையும் குறித்தவாறு. உன்னுதலன்றிப் புகாதே நிற்கும் துரிய நிலையிலே நிற்பின் சிவானந்தத்தை உணர்தல் கூடாமையால், `புக்குநின்று` என்றும், புக்கு உன்னுதலொழித்த அதீத நிலையிலே நிற்பின் மனவாக்கினால் போற்றுதல் கூடாமையால், `உன்னி` என்றும் கூறினார். இந்நிலைகளின் இயல்புகளை நூலுள் அறிக. இதனால் தமது அநுபவ நிலையை உணர்த்தியவாறாயிற்று.