
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
English Meaning:
Lord Transcends What He RevealedThe Lord who is beyond birth and death,
Inspired me to instruct the three and four,
Yet, the surpassing greatness of Him, of the three radiant lights,
Is never fully revealed.
Tamil Meaning:
பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான்மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோகமாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.Special Remark:
அவர்களோடு அப்பேறு எனக்கும் கிடைத்தது என்பது குறிப்பெச்சம். பணிவினால் இதனை எடுத்தோதாது குறிப்பாற் பெறவைத்தார். நாங்கள் பெற்ற பேறு பிறர் பெறுதற்கரியது என அதன் அருமை கூறியவாறு. இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கிப் பொருள் கூறுக. மூன்று, நான்கு என்னும் முறைமையால் உளதாகும் செய்யுளின்பம் நோக்கி மூவரை முன் வைத்தார். இறப்பும், பிறப்பும் ஒழிந்த பெருமையை உடைய தேவன் என்க. ஒழிந்த அதனையே பெருமை எனக் கூறலால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். மூன்றன் என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முச்சுடர்களின் ஒளியும் சிவபெருமானது முக்கண்ணின் ஒளியாதல்பற்றி, செழுஞ்சுடர் மூன்றன் ஒளியாகிய தேவன் என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage