
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - பாயிரம்
பதிகங்கள்

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.
English Meaning:
Lost In Sakti DevotionHear O! Indra, what urged urged me thus to stay?
She the Holy One, Divine Daughter of austerity of the Universe, rich in penance,
In devotion deep and true, Her I adored
And with ardour unceasing, here I pursued.
Tamil Meaning:
இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவமாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்துவந்தேன்.Special Remark:
`அதனால் அவள் என்னை அவ்வாறு இருக்கச் செய் தாள்` என்றவாறு. அருந்தவச் செல்வி, உருவகம். ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும் செய்ய வல்லது தவமாகலின், அதனை உலகத்தின் தலைவியாகக் கூறினார். கல்வி செல்வங்களைக் `கலை மகள், திருமகள்` என்றல்போலத் தவத்தை, `புவனாபதி` என்றார். `புவனா` என்பது உலகமாகிய பெண்பாலை உணர்த்தி நின்றது. `பதி` என்பது, `அவனைப் பதமாக உடையவள்` என்னும் ஈகார ஈற்று ஆரியச்சொல். `இந்திரனே` என்றது, அப்பெயருடைய மாணாக்கரை முன்னிலைப் படுத்ததாம்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage