ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

English Meaning:
Lord Blessed Tirumular

"Our Nandi Peruman (Lord Nandi), the one who holds onto the bull, deer, and axe without letting go, explained to me the hidden meanings of the Vedas, which are the teachings of Lord Shikanda Parameshwara. He blessed me with his divine feet, bestowing his knowledge upon my head."
Tamil Meaning:
நமது நந்தி பெருமான், கரியோ, மானை, மழுவை விடாமல் தழுவிய சீகண்ட பரமேசுரனின் உபதேசத்தின் மறைப் பொருள்களை எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தந்த திருவடிகளை என்னுடைய தலையில் சூட்டிப் பாக்கியம் செய்தார்.
Special Remark:
சீகண்ட வுருத்திரர் என்பது விளங்குதற் பொருட்டே வாளா, `தற்பரன்` என்னாது, பெற்றம் முதலிய அடையாளங்களைக் கூறினார். கற்பனை - உபதேசம். சராசரம் என்பது, `சித்து, அசித்து` என்னும் பொருட்டாய், அனைத்துப் பொருள்களையும் குறித்தது. அற்றம் - மறை பொருள்; இரகசியம். நன்மை - ஞானம். இதனால், சீகண்ட பரமேச்சுரன்பால் நந்திபெருமானும், நந்திபெருமான்பால் இவ்வாசிரியரும் ஞானம் பெற்றமை கூறப்பட்டன. இப்பாட்டும் பதிப்புக்களில் இடம் மாறி உள்ளது.