
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
English Meaning:
Attainment of Deathlessness and BirthlessnessIn this world they received the Deathless Way great
In this world they attained the Birthless End great
The Gift unique of non-separateness from the Sabhapure
The ineffable rapture, of non-communication with the world.
Tamil Meaning:
மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.Special Remark:
`ஆதலின் அவர்க்கு மீளப் பிறவிக்கு வித்தாகிய வினை உண்டாதல் இல்லை` என்பதாம். `பேசுதல்` என்பது, `அளவ ளாவுதல் - தொடர்புறுதல்` என்றவாறு. `அஃது இல்லை` எனவே, உலகத்தில் நின்றே அதனின் நீங்கிநிற்றல் பெறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage