
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
English Meaning:
Sleeping Still They PerceiveSleeping, in themselves they saw Siva`s World,
Sleeping, in themselves they saw Siva`s Yoga,
Sleeping, in themselves they saw Siva`s Bhoga,
How then describe the minds
Of those who sleeping saw?
Tamil Meaning:
சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங் களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக்கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற் கரிதாம்.Special Remark:
`தூங்குதல்` என்றது, தம் முனைப்பால் சிவமல்லாத பிற பொருளாகிய தம்மையும், தம்மைச் சார்ந்துள்ள உடம்பு, உலகம் என்ப வற்றையும் அறிதலை ஒழிந்து நிற்றலையாம். இதனையே `அறி துயில்` எனவும், `யோக நித்திரை` எனவும், `தூங்காமல் தூங்குதல்` எனவும் கூறுவர். தம்மையும், தம்மைச் சார்ந்த பாசங்களையும் மறந்திருத்தலால் தூங்குதலும், சிவத்தை உணர்ந்து நிற்றலால் விழித்திருத்தலும் ஆகின்ற இரு நிலைமையும் ஒருங்கு நிகழ்தலை இவ்வாறு உணர்த்துவர் என்க.இதனால், அதீதத்தில் நின்றாரது பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage