
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 4. உபதேசம்
பதிகங்கள்

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
English Meaning:
The Glorious Beauty of Divine DanceInside the ruby like the emerald flaming
Inside the ruby like the emerald inset,
He dances the Holy Dance in the Sabha of purest gold
What Oh, the reward, to those who Him adored!
Tamil Meaning:
மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!Special Remark:
மேல், ``அரன்`` எனவும், ``உமை`` எனவும் குறிக்கப் பட்ட அப்பன், அம்மை இவரது நிறம் முறையே செம்மையும், பசுமையும் ஆகலானும், அம்மையது வடிவம் அப்பனது வடிவிற் பொருந்தி நிற்றலானும் ``மாணிக்கத்துள்ளே ... ... ... மாடமாய்`` என்றார். ஆணிப் பொன் பிற பொன், எல்லாவற்றின் மாற்றினையும் அளத்தற்கு உரையாணியாய் நிற்கும் பொன். `மன்றினில் நின்று` என ஒரு சொல் வருவிக்க. ``என்ன`` என்ற வினா, `எத்துணையாவன` என்னும் பொருட்டாய், அளவின்மை குறித்து நின்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage