
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து)
ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.
English Meaning:
Jnanis Know Lord`s SeatThe Sound (Nada), and the Mind that perceives Sound,
And the place where Mind undistracted discerns Truth,
—These they know not;
That place the Jnanis truly know
That verily is Lord`s Seat.
Tamil Meaning:
சூக்குமை முதலிய வாக்குக்களும், அவ்வாக்குக் களால் இயக்கப்படுகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களும், அந்த அந்தக்கரணங்களால் உண்டாகின்ற உணர்வுகளும் ஆகிய இவை ஒருங்கு தொக்க நிலையாகிய அறிவின் நிலையை உலகர் அறிய மாட்டார். அதனை உள்ளவாறு அறிய வல்லவர் ஆசான்ம மூர்த்தியின் அருள் பெற்றவரே ஆவர். அவர்க்கு அந்த நிலையே சிவனது இருப்பிடமாதல் விளங்கும்.Special Remark:
இங்குக் கூறப்பட்ட மூன்றனுள் முதலாவதாகிய வாக்கும் இறைவன் இயக்கவே இயங்கும் ஆகவே இறைவன் வாக்கினை நேராகவும், அந்தக் கரணங்களை வாக்கு வழியாகவும் இயக்கவே உயிர்கட்கு உணர்வுகள் உண்டாகின்றன. ஆகவே, `இவ்வுண்மை உணருமிடத்து வாக்கே இறைவனுக்கு இடம்` என்பது விளங்கும். வாக்குப் பிரணவ வடிவாகலின் பிரணவம் இறைவனுக்கு இடமாதல் விளங்கும். அது விளங்கவே விந்து சயம் பெறுதற் பொருட்டு, பிரணவ யோகத்தில் மனம் செல்லும் என்பதாம்.``மனம்`` என்றது உபலக்கணம் ஆதலின், ஏனைக்காரணங்களும் கொள்ளப்படும்.
இதனால், `சுத்தமாயை யாகிய விந்துவின் சயத்திற்குப் பிரணவ யோகத்தை விரும்பிச் செய்தல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage