
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருவுயி ரோடும்
கருதத்து வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறிவை கற்பனை தானே.
English Meaning:
Lord Settles Fate and longevity of Embryo With ConcernThe Lord has concern great
For the seed in womb;
Even in the seed with forethought
He settles its fate and span of life;
Thus, when the Seed itself is the Causal Thought,
To attribute Cause and Effect to factors outside
Is but imagination`s figment.
Tamil Meaning:
இறைவன் கருவிற்பட்ட உயிரோடு அதன் அறிவுக் கறிவாய்க் கலந்து நிற்கின்றான். அதனால் அவ்வறிவிற்குப் பொருள்களை அறியும் ஆற்றலையும், ஆயுள் முதலானவற்றையும் அப்பொழுதே அமைக்கின்றான். அவன் அவ்வாறமைத்தற்கும் தந்தை தாயரது எண்ணமே காரணமாய் நிற்க, அவ்வமைப்பு அக்காரணத்தின் காரியமாகின்றது. ஆகவே, குழவியின் அறிவு, ஆயுள் முதலியவை தந்தை தாயரது எண்ணத்தினால் அமைவனவேயாம்.Special Remark:
இரண்டாம் அடியை முதலிற் கொண்டு, அதனுள்ளும் ``கருவுயிரோடும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``கருத்து`` நான்கில் முதல் இரண்டு ஆகுபெயராய் அறிவைக் குறித்தன. பொரு ளுணர்வு அக்கர வடிவாதல் பற்றி, அதனை `அக்கரம்` என்றார். `நாதம்` என்றபடி. ``வித்தாய்`` என்றதனால், அவ்விடத்து, ``கருத்து`` என்றது, கருவின் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் காரணமான தந்தை, தாயருடை யனவாயின. கற்பனை - நினைவு. இவையும் அவ்வாற்றால் அவருடை யவாயின. ``மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும்`` (திருக்குறள் - 456.) எனத் திருவள்ளுவரும் குழவியது அறிவு குணங்கட்குத் தந்தை தாயரது அறிவு குணங்கள் காரணமாதல் கூறினார்.இதனால், `கலவிக் காலத்து இருவரும் நற்கருத்துடையராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றாதலும் ஒரு வகை விந்து சயமேயாம்` என்பது கருத்து.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage