
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு)
ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.
English Meaning:
Regulation Days for Sexual UnionThose who wish to sleep with women
Let them observe the periodicity thus;
Of the two phases of the moon,
The first eight days of the waxing moon
For union appropriate are not;
In the six days that remain,
And in the first six days of the waning moon
Can they in union be.
Tamil Meaning:
மாமை நிறத்தால் வசீகரிக்கின்ற பெண்ணின் வசப் பட்டோராகிய இவர் அவளொடு கூட வேண்டின், என்றும் ஒழியாது மாறி மாறி வருகின்ற பூர்வ பக்க அபர பக்கங்களில் வளர் பிறையாகிய பூர்வ பக்கத்தில் முதல் எட்டு நாட்கள் போகத்திற்குப் பொருந்தா. (`விந்து சயத்தை விரும்புவோர் அந்நாட்களில் அதனைப் பெருதல் அரிது` என்பதாம்.) சோதிட நூலோரால் சிறப்பித்துச் சொல்லப்படாத அபர பக்கத்தில் முதல் ஆறு நாட்கள் வளர்பிறையின் இறுதி ஆறு நாட்களோடு ஒப்பனவாம்.Special Remark:
இவ் `வளர்பிறை, தேய்பிறை` என்பவற்றை மாதரது பூப்பிற்குப் பின்னர்ப் பதினைந்து நாளும், முன்னர்ப் பதினைந்து நாளுமாகக் கூறுதல் காம நூல் முறை. ஆகவே அம்முப்பது நாட்களில் இடைப்பட்ட பன்னிரண்டு நாட்கள் கலவிக் குரியனவாக அமைதல் காண்க. ``பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் - நீத்தகன்றுறையார் என்மனார் புலவர்``3 என்னும் தொல்காப்பியக் கட்டளையும் இதனோடு இயைந்து நிற்றல் காண்க.இதனால், விந்து சயம் கைகூடும் காலம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage