
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
English Meaning:
Siva Yogi Sublimates BinduDo not look at women
Who intent on lust look at you;
Away from them;
Light the fire of Kundalini;
Met your heart in divine love;
Uproot the evil desire that sight kindles;
Fix it on the source of Primal Energy
He who does it is verily the Siva Yogi.
Tamil Meaning:
தன்னைக் காதலோடு பார்க்கின்ற மகளிரைத் தான் அவர்க்கு இசைந்து பாராமல் விலகிச் சென்று யோகத்தில் நின்று புறப்பொருளைக் கண்ணால் பார்க்க எழுகின்ற ஆசையை மூலக் கனலை வளரப்பதில் சேர்த்து, மாதரைச் சிந்திக்கின்ற மனம் மாதேவனைச் சிந்தித்து உருகும்படி செய்கின்ற யோகியே சிவயோகியாதல் கூடும்.Special Remark:
`மனத்தில் எழுகின்ற மாதர் ஆசையை இங்ஙனம் யோக முயற்சியால் நீக்குதலே விந்து சயம் பெறுதற்குச் சிறந்த வழி யாகும்` என்பதாம். ``மூலத்தே சேர்க்கின்ற யோகி`` என்றமையால், அழல் என்றது மூலாக்கினியாயிற்று. `பொதுவான யோகத்தால் விந்து சயம் பெற்றவன் பின்பு சிவயோகியாய் விளங்குவன்` என்றபடி.``மடவா ரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக
மாற்றி ... ... தனை நினைய வல்லோர்க்கென்றும் பெருந்துணையை`` l
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், விந்துயத்திற்கான சிறப்புமுறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage