
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.
English Meaning:
Regulation Days for Practising YogisLet those that Yoga practise
Avoid the fifth, the sixth and the eleventh days
After the woman menstruates;
The rest, who the pleasure seek,
Take the six days, in the middle
Of the three weeks that follow.
Tamil Meaning:
கலவி செய்தற்குப் பொருந்திய காலம் இரவில் முதல் யாமமும், கடையாமமும் ஒழிந்த இடையிரு யாமமேயாம். அதனுள்ளும் காலத்தை, `சூரியகலைக் காலம், சந்திரகலைக் காலம்` என வரையறுத்தற்கு ஏதுவாகிய பிராண வாயுவின் இயக்கம் சந்திர கலையாகின்ற இடநாடியின் நீங்கிச் சூரிய கலையாகின்ற வலநாடிவழியே இயங்கும்பொழுது காமநூல் முறைப்படி கலவி செய்த பின்பு சூரிய கலையும், சந்திர கலையும் அல்லாத அமுத கலையாகிய நடுநாடியில் பிராணவாயு செல்லுங்கால் விந்துவை விடுக்க.Special Remark:
`இவ்வாறு செய்யின் விந்து சயம் கூடும்` என்பதாம். ``திரு`` என்றது `சிறப்பு` சிறப்புடையதனை, `சிறப்பு` என்றார். இரு முகூர்த்தம் ஓர் யாமமாகும். பகற்காலம் இயல்பாகவே விலக்கப் பட்டமையின், ``இருநான் முகூர்த்தம்`` என்றது இராக் காலத்திலே யாயிற்று. ``கலை காலம்`` என்பதில் ஒற்று மிகாமை வடநூல் முடிபு. `காலத்துள்` என ஏழாவது விரிக்க. `இந்து பருதி காலுள் நையுமிடத்து` என்க. ``கால்`` என்பது ``இந்து`` என்பதனோடும் கூட்டிக் கொள்ளப் படும். பிராண வாயு இங்குக் கூறிய முறையில் இயங்காவிடினும் யோகம் வல்லார் தாம் வேண்டுமாற்றால் அதனை இயக்கிக்கொள்வர். இனிப் பிராண வாயு நடுநாடி வழியிற் செல்லுதல் யோகத்தாலன்றிக் கூடாது.இதனால், மேல் நாள் வரையறுத்த பின் அந்நாள்களில் காலம் வரையறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage