
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

விந்துவும் நாதமும் மேவக் கனல்மூலம்
அந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடைச்
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.
English Meaning:
Union of Bindu and NadaWhen Bindu and Nada unite,
And Kundalini Fire each minute hair root permeates,
All thought devoid,
Siva Himself you become;
And the Bindu then dies in the Primal Bindu
Of the Body Divine.
Tamil Meaning:
மேற்கூறியவாறு செய்யும் யோகத்தால் மூலாக் கினியால் விந்துவும், நாதமும் கலந்த ஒன்றாதலும், அவ்வக் கினியின் வெம்மை உடம்பின் மயிக்கால்தோறும் பரவி நிற்றலும் நிகழ, அவ் வாற்றால் உள்ளம் உலகை வெறுத்துச் சிவத்தினிடத்தே செல்ல, பின்பு, `சிவம் நான்` என்பதாகிய சிவோகம் பாவனை உண்டாக, அதனால் விந்து அழியா உடம்பில் அதற்கு வித்தாய், அதனுள்ளே சுவறி நிற்கும்.Special Remark:
அகம் - நான். `விந்து, உடம்பு அழியாமைக்கு வித்தாய் அதனுள்ளே மாளும்` எனக் கூறற்பாலதனை இங்ஙனம் கூறினார். ``வித்தில்`` - வித்துப்போல.இதனால், விந்து சயத்தின் பொருட்டுச் செய்யப்படும் யோகம் சிவ யோகத்தையும், காய சித்தியையும் உண்டாக்குதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage