
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

பார்த்திட்டு வையப் பரப்பற் றுருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.
English Meaning:
Seek not Further UnionHaving examined these,
Abstain from worldly concerns,
And leave the maiden of shapely breasts;
And further union seek not;
Within months two
Will the baby its form take,
And all the rest you have reckoned follow.
Tamil Meaning:
மேற்கூறியபடி கருவைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து உலகத்தில் பொதுவாக நிகழும் புலன் அடக்கம் இன்மையைத் தந்தை, தாயர் தவிர்த்து இருத்தலால் கரு மக உருப் பெற்று வளர்ந்து முதிர்ந்து பின்பு விதி அம்மகவைத் தாயின் வயிற்றிலிருந்து நீக்கி நிலத்தைச் சேரும்படி சேர்த்து, (தாய் தந்தையர் குழவிமாட்டுள்ள அன்பால் ஊக்கம் மிகுந்து செய்விக்கும் தெய்வக் காப்புக்களால்) மேல் கருவுட் பட்டனவாகக் கூறிய அவ்வினைப் பயன்கள் குழவியை வந்து பற்றதொழியினும் அதன்பின் குழவி வளர்ந்து வரும் பிற்காலத்தில் அவையெல்லாம் வந்து பற்றுவனவேயாகும். ஆகையால், மேற் கூறியவற்றையெல்லாம் ஆடவன் எண்ணிப் பார்ப்பானாக.Special Remark:
``அகலினும்`` - என்ற உம்மையால், `அகலுதல் அரிது` என்பதும், `மிகச் செய்தவழி ஒருவாற்றால் நீங்கும்` - என்பதும் பெறப் படும். `பரப்பற` என்பது ``பரப்பற்று`` எனவும், `உருப்பெற்றபின்` என்பது, `உருப்பெற்று` எனவும் திரிந்து நின்றன. ``சேர்த்தல், அகலுதல்`` என்னும் வினைகட்கு `வினைப் பயன்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது. இதன் ஈற்றடி இனவகையால் மூன்றாம் எழுத்து எதுகையாயிற்று.இதனால், மேல், ``எண்ணியும் பார்க்க`` என்றது பயனில் செயலாகாமை விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage