
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தர னாவோனும்
மோக முறினும் முறைஅமிர் துண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.
English Meaning:
Conserve Sex Energy and Become HeroesThe Yogi, the Jnani, and the Siddha high
The Bhoga Yogi who is yet the king of Jnanis,
All these, though troubled by passions
Yet savour the ambrosia within; (in the Yogic way)
Heroes, all, they are indeed,
Who the Bindu had conserved.
Tamil Meaning:
மாதர்மேல் மையலை உற்றபோதிலும் அதனால் உண்டாகிய விந்து அவர்பால் சென்று வீழாத நிலைமையை எய்திய பெரியோன், யோகியும், மேலான சித்திகளைப் பெற்றவனும், அதே நிலையில் போகத்தை இழக்காதவனும், ஞான வேந்தனாய் விளங்குபவனும், யோக முறையில் உண்ணும் மதி மண்டலத்து அமுதத்தைப் பெற்று உண்பவனுமாவான்.Special Remark:
``ஞானி`` என்றது பொதுவும், ``ஞான புரந்தரன்`` என்றது அதன்கண் உயர்ந்து நிற்கும் சிறப்பும் பற்றியாம். உம்மை பெற்றுவந்த பெயர்களை எல்லாம் வேறுவேறு எழுவாயாக வைத்து உரைப்பவர்க்கு அவை, ``அண்ணல்`` என்னும் ஒருமைப் பயனிலை யோடு இயையாமை அறிக. இயைய வேண்டின், அப்பெயர்கள் யாவும் ஒருவனையே குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும்.கு-ரை: இதனால், விந்து சயத்தால் விளையும் பயன்கள் அதனைப் பெற்றவனது சிறப்பை வகுத்துக் கூறும் முகத்தால் விளக்கப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage