
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
பதிகங்கள்

விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரிந்(து)
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.
English Meaning:
Fry Bindu in Kundalini FireThe Bindu that is Bija (Seed)
Burn it agreeably,
In the Fire that is Kundalini,
That from Muladhara flames;
Course it upward into the Solar Sphere within
And touch the Lunar Sphere beyond;
There, indeed, is the nectar divine.
Tamil Meaning:
[இமந்திரத்திலும் மேல், ``அண்ணல் உடலாகி`` என்னும் மந்திரத்துட் கூறப்பட்ட பொருளே, `அண்ணல் உடலாதல்` ஆகிய அவ்வொன்றொழியக் கூறப்பட்டது.]Special Remark:
அது சிவயோகியர்க்கு ஆகும் சிறப்புமுறை. இது யோகியர் எல்லோர்க்கும் ஆகும் பொதுமுறை. அதனால் `அறிவாதல்` நீக்கி, `அமுதாதல்` மட்டும் கூறப்பட்டது. வீசம் - (பீசம்) வித்து. நந்திய - வளர்ந்த.யோக முறையில் மூலாதாரம் முதல், கொப்பூழ் வரையுள்ள பகுதி அக்கினி கண்டமாகவும், கொப்பூழ் முதல் இருதயம் முதல் கண்டம் வரையுள்ள பகுதி சூரிய கண்டமாகவும், அதற்குமேல் உள்ள பகுதி சந்திர கண்டமாகவும் சொல்லப்படும். அதிகண்டர் - அக்கினி கண்டத்திற்கு மேல் உள்ள கண்டம். ``சந்திரன்`` என்றதும் சந்திர கண்டத்தை.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage